செவன்த் டே ஒயிட் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
செவன்த் டே ஒயிட் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசு
செவன்த் டே ஒயிட் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பெற்றோர்கள் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி செவன்த் டே ஒயிட் மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் டாக்டர் திரவியராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் அதிசயம் திரவியராஜ் வரவேற்றார். பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம், ஊராட்சி மன்ற தலைவர் விமலா தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் ரமேஷ், விழுப்புரம் வக்கீல் கிஷோர்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 100 சத வீத வருகை பதிவு, விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி களில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்டால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லலாம் என்றனர். விழாவில் சார்பதிவாளர் சூரியா, இந்தியன் வங்கி மேலாளர் ஜாவித் அகமது, பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, செவன்த் டே அட்வென்டிஸ்ட் பொருளாளர் கிறிஸ்து ராஜா, இலாகா செயலர் பாஸ்டர் அலெக் சாண்டர்ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story