குப்பைகளை பிரித்து கொடுத்தால் பரிசு -கவுன்சிலர் அதிரடி
கவுன்சிலர் பவுல்ராஜ்
மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் தரும் வீடுகளுக்கு பரிசு வழங்கப்படும் என நெல்லை மாநகர கவுன்சிலர் அறிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 6வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் வார்டு மக்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கிற வீடுகளை அடையாளம் கண்டு குலுக்கள் முறையில் ஐந்து வீடுகளுக்கு தலா 1000 ரூபாய் என மொத்தம் 5000 ரூபாய் மாதம் மாதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பால் வார்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Next Story