ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

மல்லசமுத்திரத்தில் குழந்தைகள் தின விழா - ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மல்லசமுத்திரத்தில் குழந்தைகள் தின விழா - ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் பாரிக் கலைக்கூடமும் ராமகிருஷ்ணா நர்சரி பிரைமரி பள்ளியும் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான ஓவிய போட்டியை இணைய வழியில் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று ராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்றது... நிகழ்ச்சியை ராமகிருஷ்ணா பள்ளியின் முதல்வர் ஹரி தொகுத்து வழங்கினார். பள்ளியின் தாளாளர் ஜிகே நடராஜ் முன்னிலை வகித்தார். பாரிக் கலைக்கூடம் ஓவியாசிரியர் பரமேஸ்வரன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் தலைசிறந்த ஓவியர்களின் ஒருவரான கோகுலம் விஜய்.,திரைப்படப் புகழ் இன்று நேற்று நாளை படத்தின் டைம் மெஷின் காஷ்மோரா படத்தில் அரண்மனையையும் வடிவமைப்பு செய்து கொடுத்த கோபி ஓவியரும்கலந்து கொண்டார்கள்... சிறப்பு விருந்தினர்கள் ஓவியத்துறையில் தற்போது ஏற்பட்ட வளர்ச்சி பற்றியும் கலைத்துறையில் தாங்கள் பெற்ற அனுபவத்தையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்... இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் உற்சாகத்தையும் நோக்கத்தையும் அளித்தது.. மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது..வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில், வரதராஜ் சதீஷ்குமார், பொதுமக்கள் மற்றும் திருச்செங்கோடு சேலம் சுற்றுவட்டார மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story