மின்ஆற்றல் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை சார்பில் மின் ஆற்றல், மின் சிக்கனம், மின் பாதுகாப்பு ஆற்றல் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் சுப்புராயன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் அனைவரையும் வர வேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்,
விழாவில் விழுப்புரம் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் காளிமுத்து கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, செயற்பொறியாளர்கள் சந்தி ரன், சிவகுரு, சிவசங்கரன், செந்தில்நாதன், சுரேஷ், ராஜேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சிவமுருகன், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணலீலா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் அய்யனார், பொருளாளர் சுகதேவ், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து மற்றும் 50 பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள், ஆற்றல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆற்றல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயபாஸ்கர் நன்றி கூறினார்.