மாநில கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
மாநில கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன் பரிசு வழங்கினார்.
சேலம் 4 ரோடு சிறுமலர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி பள்ளி வளாகத்தில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில், சேலம், சென்னை, மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. சென்னை வருமான வரித்துறை கால்பந்து அணியும், சென்னை தமிழ் லைன்ஸ் கால்பந்து அணியும் இறுதிப்போட்டியில் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ் லைன்ஸ் அணி 2-ம் இடமும், சென்னை ஒய்.எம்.எஸ்.சி. அணி 3-ம் இடமும், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அணி 4-ம் இடமும் பெற்றன. இதனை தொடர்ந்து கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, பிரகாஷ் மற்றும் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், கால்பந்து விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். கள் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி பள்ளி வளாகத்தில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில், சேலம், சென்னை, மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. சென்னை வருமான வரித்துறை கால்பந்து அணியும், சென்னை தமிழ் லைன்ஸ் கால்பந்து அணியும் இறுதிப்போட்டியில் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ் லைன்ஸ் அணி 2-ம் இடமும், சென்னை ஒய்.எம்.எஸ்.சி. அணி 3-ம் இடமும், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அணி 4-ம் இடமும் பெற்றன. இதனை தொடர்ந்து கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.