கன்னியாகுமரி ஆட்டோ ஓட்டுநா்களிடையே பிரச்னை

கன்னியாகுமரி ஆட்டோ ஓட்டுநா்களிடையே பிரச்னை

கன்னியாகுமரியில் ஆட்டோ ஓட்டுநா்களிடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.


கன்னியாகுமரியில் ஆட்டோ ஓட்டுநா்களிடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஏராளமான ஆட்டோ நிறுத்தங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி காவல் நிலையம் அருகே 25 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே அப்பகுதியில் புதிதாக ஒரு ஆட்டோ ஓட்டுநா் சங்கம் அமைக்க ஒரு தரப்பினா் முற்பட்டனா். மேலும் அங்குள்ள அண்ணா தொழிற்சங்க பெயா் பலகையை, புதிதாக ஆட்டோ ஓட்டுநா் சங்கம் ஏற்படுத்த முயன்ற நபா்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் புகாா் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கன்னியாகுமரி காவல் நிலையத்தை அனைத்து ஆட்டோ ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் முற்றுகையிட்டனா். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநா்களுடன் காவல்துறை ஆய்வாளா் நெப்போலியன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், அண்ணா தொழிற்சங்க பெயா் பலகையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்த நிலையில் ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா் .

Tags

Next Story