குடிநீர் வழங்குவதில் சிக்கல்: சேர்மன் நேரில் ஆய்வு
பணிகளை ஆய்வு செய்த சேர்மன்
திருச்செங்கோடு தண்ணீர் பந்தல் பாளையத்தில் ரயில்வே பாலத்திற்கு கீழ் கீழ்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் புல்லா கவுண்டம்பட்டி பகுதியில் இருந்து திருச்செங்கோடு நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாய் பாலம் அமைப்பதற்கு இடையூறாக உள்ளதால் அதை மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்ப பணியினை நகர மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சேகர், நகராட்சி பொறியாளர் சரவணன், மற்றும் நகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல்,
தாமரைச்செல்வி மணிகண்டன், சினேகா ஹரிஹரன்,செல்லம்மாள் தேவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர், மற்றும் இப்பணி நடைபெறும் காரணத்தினால் திருச்செங்கோடு நகராட்சிக்கு மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இயலாது என்று நகராட்சி சார்பாக அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது