மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி
மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி
மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று நடந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார். கண்காட்சியில் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் 35 அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மர சிற்பங்கள், புடவைகள், உணவு பொருட்கள், சணல் பை, வீட்டு உபயோக பொருட்கள், பூஜை பொருட்கள், சிறு தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் கைவினை பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Next Story