தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2வது யூனிட்டில் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக இரண்டாவது யூனிட்டில் உற்பத்தி நிறுத்தம் காரணமாக 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் அமைந்துள்ளது இங்கு ஐந்து யூனிட்கள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி அதிக அளவு நடைபெற்று வருவதன் காரணமாக தூத்துக்குடி அனல் நிலையத்தில்,
பராமரிப்பு பணிக்காக இரண்டாவது யூனிட் 45 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்து வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story