மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி - கலெக்டர் பங்கேற்பு

பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காண்பது குறித்து ஆலோசித்த மாவட்ட ஆட்சியர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, புதிய ரேஷன் அட்டை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் சமயமூர்த்தி அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அரங்கில் நடைபெற்றது. இதில் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை எவ்வாறு செயல்படுத்துவது குறித்தும், நடைமுறையில் உள்ள திட்டப்பணிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறதா என அதிகாரிகளிடம் கேட்கப்பட்டு பின்னர் மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை உடனடியாக தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள்,பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story