தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகள் கூட்டத்தில் அறிவுருத்தப்பட்டது.   

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகள் கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் வரதராஜ் அறிவுரை கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வியாபாரிகளுக்கு வலியுறுத்தி பேசினார்.

சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆலோசனைப்படி சேத்துப்பட்டு வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சப் இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், முருகன் ஆகியோர் பேசுகையில் தமிழக அரசு போதை பொருட்களான ஆன்ஸ், குட்கா ,கஞ்சா, பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது குறிப்பாக பள்ளிக்கூட பகுதிகளில் பெட்டிக் கடைகள் வைத்திருப்போர் கவனமாக இருக்க வேண்டும்.

போதை பொருட்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை என பல்வேறு அதிகாரிகளை நியமித்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வியாபாரிகள் தங்களுடைய வருமானத்தை பார்க்காமல் இன்றைய இளைஞர்களையும் பொது மக்களையும் பாழ்படுத்தி வரும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம். அப்படி யாராவது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் அனைத்து வியாபாரி சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பாண்டியன், பாஸ்கர், சுரேஷ், ராஜா, ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story