மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை - 16 பேர் கைது , மது பாட்டில்கள் பறிமுதல்
பைல் படம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சில இடங்களில் திருட்டுத்தனமாக மது பானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தஞ்சாவூர் மதுவிலக்கு அமல் காவல் பிரிவினர் ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு, தென்னங்குடி பகுதிகளிலும், கும்பகோணம் மதுவிலக்கு அமல் காவல் பிரிவினர் பந்தநல்லூர், கும்பகோணம், பாபநாசம் பகுதிகளிலும், பட்டுக்கோடடை மதுவிலக்கு அமல் காவல் பிரிவினர் பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை, அத்திவெட்டி, ஊரணிபுரம் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வீடுகள், வீட்டின் அருகில், பெட்டிக் கடை முக்கிய சந்திப்பு இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சேகர் (58), ஜெயக்குமார் (40), பாப்பு (75),கோவிந்தசாமி (52), பானு (61), பூவலிங்கம் (62), சுதாகர் (41), காசிராமன் (57), சாமிக்கண்ணு (80), அருண்குமார் (27), கதிர் வேல் (23), பாஸ்கர் (43), காளிமுத்து (53), பாரதிதாசன் (58), மோகன் (39) உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 87 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.