குற்றால அருவிகளுக்கு செல்ல தடை - போலீசார் தீவிர கண்காணிப்பு
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குற்றால அருவிகளுக்கு செல்லும் பாதைளை அடைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு கனத்த மழை எச்சரிக்கை வழங்கப்பட்டிருப்பதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து இன்று குற்றாலம் அருவிகளுக்கு செல்லும் பாதையில் தடுப்பு கம்பிகளை வைத்து தடுத்துள்ள போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story