நாகர்கோவில் தடையை மீறி போராட்டம்: பாஜகவினர் மீது வழக்கு

நாகர்கோவில் தடையை மீறி போராட்டம்: பாஜகவினர் மீது வழக்கு

கைது செய்யப்பட்ட பாஜகவினர்

நாகர்கோவில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 50 மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தடையை மீறி மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பொருளாளர் முத்துராமன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் கவுன்சிலர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் ஏராளம் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைதான 44 பெண்கள் உட்பட 340 பேரையும் வாகனத்தில் ஏற்ற முயன்ற போது போலீசாருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.

பின்னர் அனைவரும் வாகனத்தில் ஏற்றி ஒரு திருமணம் மண்டபத்தில் தங்க வைத்தனர். பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதற்கு இடையில் தடையை மீறி போராட்ட நடத்திய 340 பேர் மீதும் நேசசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story