.குடிநீருக்கு ரூ.25 கோடியில் திட்ட மதிப்பீடு

.குடிநீருக்கு ரூ.25 கோடியில் திட்ட மதிப்பீடு

மாநகராட்சி பகுதியில் குடிநீருக்கு ரூ.25 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பட்டு உள்ளது என மாநகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் தெரிவித்தார்.


மாநகராட்சி பகுதியில் குடிநீருக்கு ரூ.25 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பட்டு உள்ளது என மாநகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலச்சந்தர், துணை மேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:- இமயவரம்பன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி):- மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 குற்றவியல் சட்ட மாற்றங்களை நிறுத்தி வைக்கக்கோரி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தெய்வலிங்கம் (தி.மு.க.):- டி.பி.சி. பணியாளர்கள் நியமிப்பதில், சங்கம் என்று கூறிக்கொண்டு தனிப்பட்ட நபர் ஒருவர் தலையிடுவதை தடுக்க வேண்டும். பழுதாகி உள்ள அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்க வேண்டும். நெடுஞ்சாலை பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். ஈசன் இளங்கோ (தி.மு.க.):- மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் குப்பைகள் எடுத்துச்செல்வதை மக்கள் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பின்னர் உறுப்பினர்கள் சிலர் குடிநீர் 15 நாளைக்கு ஒரு முறை வருகிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர் என்றனர். அதற்கு பதில் அளித்த ஆணையாளர் பாலச்சந்தர், மாநகராட்சி பகுதிக்கு நங்கவள்ளி திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு 4 முறை குடிநீர் குழாய் வெடித்து விட்டது. இதை சரி பார்க்கும் நிலை ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் தாமதமாகியது. எனவே மோட்டார் குழாய் உள்ளிட்ட பணிகளை சரி செய்து குடிநீருக்காக மட்டும் ரூ.25 கோடி திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனுமதி கிடைத்து பணிகள் தொடங்கப்படும். அதன்பிறகு 10 வருடத்திற்கு பிரச்சினை இருக்காது என்றார். தொடர்ந்து மேயர் ராமச்சந்திரன் பேசும் மாநகராட்சி பகுதி முழுவதும் சாக்கடை கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story