சாத்தூரில் திட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

சாத்தூரில் திட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாத்தூர் வட்டத்திற்கான பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், சாத்தூர் வட்டத்திற்கான பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பொது விநியோக திட்டத்தின் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பொது விநியோக அதிகாரிகள் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பொது விநியோக கடையை விரைவாக அரசு கட்டிடத்தில் இயக்குவதற்கு இடங்கள் தயார் செய்து கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் அனைத்து பொது விநியோக கடைகளில் கண்காணிப்பு உறுப்பினர்களின் போன் நம்பருடன் பெயர்கள் பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சிவகுமார் கோட்டாட்சியர் நேர்முக அலுவலர் சரவணன் மற்றும் பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மதி மணிவண்ணன், அம்மா மணிவண்ணன் மற்றும் பொதுவிநியோக திட்ட சாத்தூர் வட்ட அலுவலர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story