முகலிவாக்கத்தில் 3 மாதத்தில் வடிகால் பணியை முடிக்க திட்டம்

முகலிவாக்கத்தில் 3 மாதத்தில் வடிகால் பணியை முடிக்க திட்டம்

முகலிவாக்கத்தில் மழை நீர் வடிகால் பணியை 3 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


முகலிவாக்கத்தில் மழை நீர் வடிகால் பணியை 3 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாங்காடு-முகலிவாக்கம் சாலையில், 12 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை, மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மாங்காடு - முகலிவாக்கம் நெடுஞ்சாலையை, ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையில் மழைநீர் வடிகால்வாய் இல்லை. இதனால், மழைக்காலத்தில் சாலையில் வெள்ள நீர் தேங்கி, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது.

இந்த சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் 12 கோடி ரூபாய் மதிப்பில், 4 கி.மீ.,க்கு மூன்று கட்டங்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள், அண்மையில் துவங்கியுள்ளன. கால்வாய் அமைய உள்ள இடங்களில், ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும், மாங்காடு நகராட்சி, பரணிபுத்துார் மற்றும் மவுலிவாக்கம் ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள், இப்பணிக்கு இடையூறாக உள்ளன.

இதனால், வடிகால்வாய் கட்டுமான பணிகள் துவங்கிய சில நாட்களில், பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றி, வடக்கிழக்கு பருவ மழைக்கு முன் கால்வாய் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'கால்வாய் அமையும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து, இதுவரை நுாற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கியுள்ளோம். விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய் அமைக்கும் பணிகளை மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Tags

Next Story