ரூ.3.44 கோடியில் திட்ட பணிகள் - அமைச்சர் துவக்கி வைப்பு

வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.3.44 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.44 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் . தலைமையில் பிப்ரவரி 27ம், தேதி பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தபோது, பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மூங்கில்பாடி ஊராட்சியில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி, ஒதியம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி, அசூர் கிராமத்தில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி அந்தூர் கிராமத்தில், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, வரகூர் கிராமத்தில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மிக விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெரியம்மாபாளையம் ஊராட்சியில் நியாய விலை கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. ஒதியம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் முறையாக, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச் செல்வி மதியழகன், வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மருத்துவர் கருணாநிதி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் . செல்வகுமார் , வட்டாட்சியர் கோவிந்தம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story