நாமக்கல் ஒன்றியத்தில் திட்டப் பணிகள் - திட்ட இயக்குனர் ஆய்வு

நாமக்கல் ஒன்றியத்தில் திட்டப் பணிகள் - திட்ட இயக்குனர் ஆய்வு

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் சிலுவம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, தளிகை, எர்ணாபுரம் மற்றும் திண்டமங்கலம் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவகுமார் ஆய்வு செய்தார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கட்டப்படும் பள்ளி கழிவறை பணிகள், எஸ்.ஐ.டி.எஸ் திட்டத்தின் கீழ் பள்ளி கட்டிடம் பராமரிப்பு பணிகள், பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் என ரூ 91.85 லட்சம் மதிப்பிலான பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், தனம், உதவி பொறியாளர்கள் பாஸ்கரன், சாந்தாராமன், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உடன் இருந்தனர்.


