திருப்புவனத்தில் பெருகி வரும் தெருநாய்கள் - பொதுமக்கள் அச்சம்

திருப்புவனத்தில் பெருகி வரும் தெருநாய்கள் - பொதுமக்கள் அச்சம்

திருப்புவனத்தில் பெருகி வரும் தெருநாய்கள் - பொதுமக்கள் அச்சம்


திருப்புவனத்தில் பெருகி வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

திருப்புவனத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டதால், தெரு நாய்கள் பெருகி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. திருப்புவனத்தில் ஆடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் 50க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மீதமாகும் கழிவுகளை ஊருக்கு வெளியே குழி வெட்டி புதைக்க வேண்டும் என்பது விதி, ஆனால் கடைக்காரர்கள் கழிவுகளை அப்படியே ரோட்டில் வீசுகின்றனர்.

இதனை உண்பதற்காக ஒவ்வொரு இறைச்சி கடை வாசலிலும் 5 முதல் 10 தெரு நாய்கள் வரை கூட்டம் கூட்டமாக காத்து கிடக்கின்றன. பேரூராட்சி வாசலின் இருபுறமும் உள்ள இறைச்சி கடைகள் வாசலிலேயே 15க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இறைச்சி கிடைக்காத காலங்களில் நகருக்குள் உலா வரும் தெரு நாய்கள் ரோட்டில் விளையாடும் சிறுவர் சிறுமியர்கள், முதியோர்களை கடித்து காயப்படுத்தி வருகின்றன. 50 தெரு நாய்கள் இருந்த இடத்தில் தற்போது 200க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன.

தெரு நாய்களை கட்டுப்படுத்த அவற்றிற்கு 15 ஆண்டுகளுக்கு கருத்தடைசெய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்: தெரு நாய்களுக்கு ஆப்பரேஷன் செய்ய பேரூராட்சி நிர்வாகம் ஒரு நாய்க்கு குறைந்த அளவு பணம் மட்டுமே வழங்குவதால் கால்நடைமருத்துவர்கள் வர மறுக்கின்றனர்.

அரசு கால்நடை மருத்துவர்களும் போதிய அளவில் இல்லாததால் தனியார் மருத்துவர்கள் மூலமாகவே நாய்களுக்கு ஆப்பரேஷன் மேற்கொள்ள வேண்டும், நாய் பிடிக்கும் வண்டியும் திருப்புவனத்தில் இல்லை, மானாமதுரையில் இருந்த வாகனம் வரவழைத்து தெரு நாய்களை பிடிக்க வேண்டும், என்பதால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் அப்பாவி மக்கள் தினசரி தெரு நாய்களிடம் கடிபட்டு மருத்துவமனைக்கு அலைந்த வண்ணம் உள்ளனர்.

Tags

Next Story