தர்மபுரியில் ஐயப்ப ரத யாத்திரை பிரசாரம்

X
ஐயப்பன்
தர்மபுரி மாவட்ட சபரிமலை ஐயப்பசேவா சமாஜம் உத்திர தமிழ்நாடு சார்பில் தர்மபுரி சாலை விநாயகர் கோயில் அருகே இருந்து ஐயப்ப தர்ம பிரசார ரதயாத்திரை நேற்று துவங்கியது. ரதயாத்திரையை திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி துவக்கி வைத்தார். முன்னதாக சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ரதயாத்திரை தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இண்டூர், நல்லம்பள்ளி தாலுகாகளில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஐயப்ப சேவா சமாஜ மாநில இணை பொது செயலாளர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
