அனுமதி இன்றி பிரச்சாரம்; பாஜ.,வினர் மனு

அனுமதி இன்றி பிரச்சாரம்; பாஜ.,வினர் மனு

சங்ககிரியில் தேர்தல் விதிமுறைகளை மீறி மகளிர் சுய உதவி குழுக்கூட்டத்தில் பாஜ.,வுக்கு எதிராக பிரசாரம் செய்ததாக கூறி கட்சியினர் மனு அளித்துள்ளனர். 

சங்ககிரியில் தேர்தல் விதிமுறைகளை மீறி மகளிர் சுய உதவி குழுக்கூட்டத்தில் பாஜ.,வுக்கு எதிராக பிரசாரம் செய்ததாக கூறி கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடைபெற்ற மகளரி சுய உதவி குழுக்கூட்டத்தில் பாஜகவிற்கு எதிராக பிரசாரம் செய்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக சார்பில் நாமக்கல் மக்களவை தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு.

சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், சங்ககிரி சட்டப்பேரவை பொறுப்பாளருமான ரமேஷ்கார்த்திக், நாமக்கல் மக்களவை தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், வருவாய்கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரிடம் அளித்துள்ள புகார் மனுவில் தற்போது தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருக்கும் போது சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் உள்ள வாசவி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் பாஜகவிற்கு எதிராக வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி இன்றி கூட்டம் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரத்தல் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் புகார் மனு அளித்தனர்.இதில் சங்ககிரி நகர தலைவர் முருகேசன், மகளிர் அணி சுதா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story