இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்போது முறையாக சரிபார்க்கணும்...!
ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்போது, முறையாக ஆராய்ந்து வழங்கவேண்டும் என அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் போது ஆராய்ந்து முறையாக வழங்க வேண்டும். என அமைச்சர் துரைமுருகன் பேச்சு. வேலூர் மற்றும் காட்பாடி வட்டங்களில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பட்டா முகாமில் 1009 பயனாளிகளுக்கு ரூ.4.93 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளையும், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்த பொதுமக்களில் 410 பயனாளிகளுக்கு ரூ.16.48 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகளையும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்தமிழறிஞ்சர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டா வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தஞ்சையில் நில உரிமையாளர்களிடம் பணியாற்றி வந்த பல்லாயிரம் ஏழை மக்கள் சொந்த இடம் இல்லாமல் இருந்த நிலையில் ஒரே ஒரு உத்தரவில் பல ஆயிரம் பேர் பயனடைய கூடிய வகையில் நிலங்களை வழங்கியவர். அவரைப் போலவே அவருடைய மகன் நம்முடைய முதல்வர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
தமிழக முதல்வர் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சி தலைவரும் ஆய்வு செய்து முறையாக பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தை கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார். தொடங்கப்பட்ட நாள் முதல் வேலூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை 16,095 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் காட்பாடி வட்டங்களை சார்ந்த 1009 நபர்களுக்கு ரூபாய் 4.5 கோடி மதிப்பிலான வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. என்னுடைய அனுபவத்தில் ஒரே இடத்தில் ஆயிரம் நபர்களுக்கு மேல் பட்டா வழங்கியது இதுவே முதல் முறை என பேசினார் .
நீர்நிலைகளில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. எனவே அலுவலர்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் போது ஆராய்ந்து முறையாக வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் வீட்டுமனை இல்லாத மக்களே இல்லை என்ற நிலையே இந்த அரசின் லட்சியம். காட்பாடி பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு தொடர்ந்து பட்டா வழங்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.