பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் சொத்து விபரம்

பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் சொத்து விபரம்

   பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் சொத்து விபரம்  

தேசிய கூட்டணியில் உள்ள பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட உள்ள சௌமியா அன்புமணி வேட்பு மனுவில் தாக்கலின் போது சமர்பித்துள்ள சொத்து விவரங்கள்...

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசியக் கூட்டணியில் உள்ள பா.ம.க. சார்பில் போட்டியிட சவுமியா அன்புமணி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில், 20 லட்சத்து 71 ஆயிரத்து 840 மதிப்பிலான 25.90 கிலோ வெள்ளி பொருட்கள்,1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான 2927 கிராம் தங்க நகைகள் மற்றும் 1 கோடியே 64 லட்சத்து 38 ஆயிரத்து 835 மதிப்பிலான 151.5 கேரட் வைர நகைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுமியா அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் நகைகள், வாகனங்கள் என ரூ.12 கோடியே 5 லட்சத்து 6 ஆயிரத்து 986 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.48 கோடியே 18 லட்சத்து 76 ஆயிரத்து 200 மதிப்பில் அசையா சொத்துக்களும் என மொத்தம் ரூ.60 கோடியே 23 லட்சத்து 83 ஆயிரத்து 186 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு வகைகளில் 9 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 738 மதிப்பில் கடன் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story