சொத்து தகராறு - தம்பி சாவு, அண்ணன் காயம்

வி.களத்தூர் அருகே சொத்து பிரச்சனையில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் தம்பி உயிரிழந்தார். அண்ணன் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம், பாண்டபாடியை சேர்ந்தவர் துறையப்பா இவரது மகன்கள், இரமையா, 66, கலியமூர்த்தி 64 இவர்களிடையே சொத்து பிரச்சினை தகராறு இருந்து வந்த நிலையில், இன்று தனது நிலத்தில் மாடு கட்டிக் கொண்டிருந்தவர் இராமையா மீது கலியமூர்த்தி கட்டையால் தாக்கியுள்ளார், இதனால் தலையில் காயமடைந்த, இராமையா கோபம் அடைந்து, தம்பி கலியமூர்த்தியை அங்கிருந்த கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் தலையில் பலத்த அடிபட்ட கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சம்பவம் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடம் சென்று, உயிரிழந்த கலியமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, மேலும் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் தலையில் அடிபட்டு சிக்சையில் இருந்து வரும் ராமையாவை போலீசார் கைது செய்து, மருத்துவமனை சிகிச்சையில் வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story