சாலையில் படர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்

சாலையில் படர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்

 சாலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் 

வடமங்கலம், வயலுார், கிளாய் சாலை சந்திப்பு அருகே சாலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வடமங்கலம் - கிளாய் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், வடமங்கலம், வயலுார், கிளாய் சாலை சந்திப்பு அருகே, வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் சாலையில் படர்ந்துள்ளன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக பாதி சாலையை ஆக்கிரமித்துள்ள, சீமைக் கருவேல மரங்களால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் செல்லும் போது, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதுடன், நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருன்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, சாலையில் படர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story