குமாரபாளையம் விடுதியில் விபச்சாரம்: ஒருவர் கைது
கைது செய்யப்பட்டவர்
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் விக்னேஷ், 29. பழ வியாபாரம். இவர் நேற்று மாலை 04:00 மணியளவில் குமாரபாளையம் அருகே, சேலம் கோவை புறவழிச்சாலை டி.மார்ட் வணிக வளாகம் அருகே, இவரது டூவீலரில், பழங்கள் கொடுத்த வகையில் பண வசூலுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு நபர் இவரிடம், இரண்டாயிரம் ரூபாய் கொடுங்கள். அழகான பெண்கள் உள்ளனர். யாராவது ஒருவரிடம் சுகம் அனுபவிக்கலாம் என கூற, இது போல் எத்தனை இளைஞர்கள் வாழ்வினை வீணாக்க போகிறானோ? என எண்ணி, அந்த இடத்திற்கு வருவதாக சொல்லியுள்ளார். அங்கு, அந்த நபர் அழைத்து செல்ல, ஆர்.ஏ.எஸ். சினிமா தியேட்டர் எதிரில், சிவசக்தி விடுதியில் இரண்டாம் தளத்திற்கு சென்றனர். அங்கு நான்கு பெண்கள் இருந்துள்ளனர். சிறிய வயதாக இருக்கும் ஒரு பெண்ணை காட்டி, வாடிக்கையாளர் வந்துள்ளார்,
கவனித்து கொள், என அழைத்து வந்த நபர் சொல்லியுள்ளார். விக்னேஷ் வசம் அந்த நபர் இரண்டாயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இப்போதுதான் வசூலுக்கு வந்து உள்ளேன். பணம் வாங்கி கொண்டு வருகிறேன் என்று கூறி, குமாரபாளையம் போலீசில் வந்து புகார் மனு கொடுத்தார். இது குறித்து நேரில் சென்ற போலீசார் விசாரணை செய்ததில், விக்னேஷ் என்பவரை அழைத்து வந்த நபர், ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா, 40, என்பது தெரியவந்தது. சிவாவை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த பாண்டிச்சேரியை சேர்ந்த ஸ்ரீதேவி, 26, ஈரோடு கண்ணகி நகரை சேர்ந்த உமா மகேஸ்வரி, 34, சென்னை, ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சீமா, 22, கோவை அருகே காரமடையை சேர்ந்த சுதா, 32, ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.