பழமையான ஆஞ்சநேயர் கோவிலை பாதுகாக்கணும்...!

குமாரபாளையத்தில் பழமையான ஆஞ்சநேயர் கோவிலை பாதுகாக்க விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர் பகுதியில் பாலக்கரை பகுதியில் பல நூற்றாண்டு பழமையான அப்புராயர் சத்திரம் என்ற இடம் உள்ளது. இங்கு கிருஷ்ணதேவராயர் குதிரைகள் கட்டி, இளைப்பாறி உள்ளார் எனவும், இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் . பல மன்னர்கள் சுவாமியை வணங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. நேற்று இந்த கோவில் வளாகத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கோவிலை பழமை மாறாமல் இந்து சமய அறநிலைத்துறை பராமரிக்க வேண்டும், வழிபாடு செய்யவரும் பக்தர்களுக்கு உதவிடும் வகையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும், தினமும் மூன்று கால பூஜை செய்யப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் சபரிநாதன், வேணுகோபால் முருகன் சீனிவாசன் ராஜ் சரவணன் சிவா சபரிராஜன் உள்பட தாய்மார்கள் பெருமளவில் பங்கேற்றனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story