தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச சீருடைகள்


ராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச சீருடைகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பிரதிபலிப்பான் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கவச சீருடை வழங்கி கெளரவிக்கும் விழா ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்றது.
ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் ஆர்.கவிதா சங்கர் பங்கேற்றுப் பேசினார். விழாவில் நகரில் துப்புரவு பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றும் வகையில் பிரதிபலிப்பான் ஒட்டப்பட்ட பாதுகாப்பு கவச சீருடை வழங்கப்பட்டு மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். விழாவில் ரோட்டரி சங்கப் பொருளாளர் கே.தண்டாயுதபாணி, நகராட்சி துப்புரவு அலுவலர் மு.செல்வராஜூ, நகர்மன்ற உறுப்பினர்கள் சாரதி, க.சரவணன், நாகேஸ்வரன், ரோட்டரி நிர்வாகிகள் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், இ.என்.சுரேந்திரன், பி.கண்ணன், ராமலிங்கம் ,உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


