தேனியில் புதிய தமிழக கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனியில் புதிய தமிழக கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையிலும் , மாநில பொருளாளர் பாலசுந்தரராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 55 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் புதிய தமிழகம் கட்சி சார்பில் பெண்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை மூடக்கோரி பல வருடங்களாக போராடி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் முன்பாக பாட்டில் உடைக்கும் போராட்டத்தையும் 4500 க்கும் மேற்பட்ட சட்ட விரோதமாக நடந்து வரும் கார்கள் வந்து பந்துகள் தென்னந்தோப்புகள் வீடியோ என மது விற்பனை நடைபெறும் அவலங்களை சுட்டிக்காட்டியும் இதுவரை தமிழக அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும் புதிய தமிழக கட்சி சார்பில் பல வருடங்களுக்கு முன்பாக போர் நாம் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய போது பூர்ண மதுவிலக்கு தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தற்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 60க்கு மேற்பட்டவர்கள் மரணங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் போதை இல்லாத தமிழகத்தினை உருவாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் , பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்ற கோரியும் , தெருவுக்கு தெரு மது விற்பனையை தடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கலை நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன் மாவட்ட இணை செயலாளர்கள் மணி மாவட்ட துணை செயலாளர் ஐயனார் சின்னமனூர் நகர செயலாளர் குமார் தேனி ஒன்றிய செயலாளர் வீரபாண்டி முருகன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் சூரிய பிரகாஷ் ஆண்டிபட்டி நகர செயலாளர் கலைச் செல்வம் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாநில மாவட்ட , ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்