கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சிகளின் இணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சிகளின் இணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் தோவாளை, செண்பகராமன் புதூர், இரவிபுதூர், தெரிசனங்கோப்பு, நட்டாலம், ஞாலம், கடுக்கரை, காட்டுப்புதூர், சாமிதோப்பு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை, அப்பகுதியில் உள்ள பேரூராட்சியுடன் இணைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த முயற்சியை கைவிட வேண்டும், ஊராட்சிகளின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சியின் முதுகெலும்பு என்ற கோரிக்கைகளுடன் இன்று குமரி மாவட்ட ஊராட்சி தலைவர்களின் நல அமைப்பு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story