மார்க்சிஸ்ட் நிர்வாகி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் நிர்வாகி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் இரவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர்
காங்கிரஸ் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நம்பாளி என்ற பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் உயர் கோபுரம் மின் விளக்கு அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விஜய் வசந்த் எம்.பி வந்திருந்தார். அங்கு அந்த மின் விளக்கு தொடர்பான கல்வெட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கட்சி நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது

. இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர குழு சார்பில் வேப்ப மூடு பூங்கா முன்பு நேற்று இரவு 9 மணிக்கு திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரச் செயலாளர் ஜஸ்டஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உசேன், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story