தஞ்சையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை கைவிட கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தை, புதிய பேருந்து நிலையம் அருகே, புதிதாக கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்திற்கு மாற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும், அனைத்து தொழிற்சங்கம் சார்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை பணிமனை சிஐடியு தலைவர் சா.செங்குட்டுவன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, ஆட்டோ சங்க மாநகரச் செயலாளர் ராஜா, தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், சிஐடியு விரைவுப் போக்குவரத்து கழக மாநில துணைத் தலைவர் பி.வெங்கடேசன், ஏஐடியுசி சம்மேளனம் துரை. மதிவாணன், சிஐடியு கும்பகோணம் மண்டல பொருளாளர் எஸ்.ராமசாமி,விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் எஸ்.ஞானசேகரன் மற்றும் அனைத்து தொழிற்சங்க தோழர்கள் கலந்து கொண்டனர். பணிமனை துணைத் தலைவர் பரத்ராஜன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



Tags

Next Story