ஆம்பூரில் தரமற்ற தார்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு

ஆம்பூரில் தரமற்ற தார்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு

சாலை அமைக்கும் பணி

ஆம்பூரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தரமற்ற தார்சாலை அமைப்பதற்கு தடுத்தி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தி நிறுத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு பகுதியான பி கஸ்பா, அன்னை சத்யா தெருவில் நகராட்சி சார்பில் திமுக பிரமுகர் கோட்டி என்பவருக்கு ஒப்பந்தம் போடப்பட்டு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தரமற்ற முறையில் சாலை அமைப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதி மக்கள் அளித்துள்ள பேட்டியில்,: ஏற்கனவே போடப்பட்ட சாலை மீது தார் சாலை அமைப்பதால் இரண்டு முறை மழை பெய்தாலே பெயர்ந்துவிடும் எனவும்,ஏற்கனவே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பலமுறை வயதானவர்கள் விழுந்து எழுந்து சென்று வருவதாகவும், அங்குள்ள கழிவுநீர் கால்வாய்களும் சீரமைக்காமல் கழிவுநீர் தேங்கி டெங்கு மலேரியா போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாக குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள் இது தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் . மேலும் தரமான சாலை அமைத்து கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரி கொடுத்தாலே வரும் தேர்தலில் வாக்களிக்க முடியும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story