மீன் கழிவு ஆலைக்கு எதிரான போராட்டம் - சி.பி.ஐ (எம்.எல்) ஆதரவு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி 3 தனியார் மீன் பதப்படுத்தும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த பிரச்னைக்கு தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPI ML) - சார்பில், மாநிலக் குழு உறுப்பினர் சகாயாயம், தூத்துக்குடி, மாவட்டப் பொறுப்பாளர் முருகன், பொட்டலூரணி கழிவு மீன்நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக்குழுவைச் சந்தித்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். கழிவு மீன்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அரசு அனுமதியை இரத்து செய்ய வேண்டும்; பொதுமக்கள்மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.