சீர்காழி அருகே அரசுமருத்துவமனையை  கண்டித்து  நூதன போராட்டம்

சீர்காழி அருகே அரசுமருத்துவமனையை  கண்டித்து  நூதன போராட்டம்

நூதன போராட்டம்


வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து இந்திய கம்யூ. கட்சியினர் பாடை கட்டி ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் கைதுசெய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும், மருத்தவர்களனள் இரவு நேரங்களில் தங்கி பணி செய்யவேண்டும், தேவையான அளவிற்கு உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு இருக்கவேண்டும்.

மருத்துவமனையை சுகாதாரமாக பராமரிக்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பாடைகட்டி அரசு பொது மருத்துவமனைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையான போலீசார் விரைந்து சென்று தடுத்தும் கேட்காததால் பாடையை பிடுங்கியெரிந்தனர்.இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது பிறகு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்

Tags

Next Story