ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதை எதிர்த்து போராட்டம்

ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதை எதிர்த்து  போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 

குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 11ஊராட்சிகளை பேருராட்சிகளுடன் இணைக்கவும் 34பேருராட்சிகளை நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன இதனால் நூறு நாள் வேலை வாய்புகள் பாதிக்கபடுவதோடு கிராம வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி பாதிக்கப்படும் மேலும் கிராம வளர்ச்சிக்காக 42விதமான திட்டங்கள் பாதிக்கப்படுவதால் இந்த திட்டத்தை கைவிட கேட்டு பல மனுக்கள் கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் கண்டு கொள்ளாத காரணத்தால் தற்போது சட்டமன்ற கூட்ட தொடர் நடை பெற்று கொண்டு இருக்கும் நேரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாதிக்கப்படும் ஊராட்சி,பேருராட்சிகளை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் , பேருராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் நூறுநாள் வேலை வாய்பு திட்ட பயனாளிகள் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து குழித்துறை , கருங்கல்,தக்கலை,திருவட்டார் உட்பட பல பகுதிகள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குழித்துறை தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளனர்

Tags

Next Story