நாகை நகராட்சியில் ஊதியம் வழங்காததை கண்டித்து போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
நாகை நகராட்சிக்குட்பட்ட நாகை மற்றும் நாகூரில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மை பணியில் சரம் ஒப்பந்த நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர்களாக 188 துப்புரவு பணியாளர்கள் 9 மேஸ்திரி 35 ஓட்டுநர்கள் என பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அவர்களது ஊதியம் நேரடியாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு வங்கி மூலம் வரவைக்கப்பட்டு வருகிறது. 5ம் தேதியிலிருந்து 10ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இருபதாம் தேதிக்கு மேல்தான் ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதால் வீட்டின் வாடகை உணவு மற்றும் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள்.
கடந்த மாதம் 20 தேதி மேல் வழங்கப்பட்டது இந்த மாதம் ஊதியம் இது நாள் வரை வழங்கப்படாததால் வாடகை வீட்டில் குடியிருக்கும் துப்புரவு பணியாளர்களை வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை காலி செய்ய சொல்வதாக தெரிவிக்கும் அவர்கள் இன்று துப்புரவு பணிகளை புறக்கணித்து புதிய பேருந்து நிலையம் அருகே அவுரி திடலில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது சரம் ஒப்பந்த நிறுவனம் சார்பாக அங்கு பேச்சு வார்த்தை நடத்திய போது தீர்வு எட்டப்படாததால் ஆத்திரமடைந்த ஒப்பந்தத்துப் பிறகு பணியாளர்கள் அவுரி திடலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடந்தே சென்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு தீர்வு காண அங்கு சென்று ஆட்சியர் அலுவலக வாசலில் காத்துள்ளனர்.
காலத்தோடு தங்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இந்த ஒப்பந்த நிறுவனத்தை மாற்ற வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாகை நகர் முழுவதும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது.