மதுபான கடை திறக்க எதிர்ப்பு - கவுன்சிலர்,பொதுமக்கள் சாலை மறியல்.

மதுபான கடை திறக்க எதிர்ப்பு - கவுன்சிலர்,பொதுமக்கள் சாலை மறியல்.

சாலை மறியல் 

கோவை,மருதமலை மெயின் ரோடு பி.என் புதூர் பகுதியில் உள்ள மயானத்தின் பின்புறம் மதுபான கடை அமைக்க கடந்த வருடம் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இடத்தின் உரிமையாளர் இங்கு கடை அமையாது என காவல்துறை முன்னிலையில் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில் மீண்டும் மதுபான கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்,மேயர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளிக்கபட்டபோது அங்கு கடை வராது உறுதியளித்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் குவிக்கபட்டு கடை திறக்கபட்டது.இதனை அறிந்த பொதுமக்கள் ஒன்றுகூடி கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியர் மற்றும் அரசின் கவனதிற்கு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக மருதமலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story