திருக்கோவிலூரில் கொடிக்கம்பம் நட எதிர்ப்பு - வாக்குவாதம்
வாக்குவாதம்
திருக்கோவிலுார் பேருந்து நிலையத்தில், பேருந்துகள் வெளியே வரும் வழியில் பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ளது. நேற்று காலை தே.மு.தி.க., கொடி கம்பத்திற்கு முன் அம்பேத்கர் மக்கள் நல இயக்கத்தின் கொடி கம்பம் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அறிந்த தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டு, தங்கள் கட்சிக் கொடி கம்பம் அருகே நடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கொடி கம்பம் புதிதாக நட யாருக்கும் அனுமதி வழங்கவில்லை எனக்கூறி அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினார்.
Next Story