சார் பதிவாளரை கண்டித்து போராட்டம்

சார் பதிவாளரை கண்டித்து போராட்டம்

ஆம்பூர் அருகே போலியான ஆவணங்களை பயன்படுத்தி, பத்திரப்பதிவு செய்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பதிவாளரை முற்றுகையிட்டனர்.  

ஆம்பூர் அருகே போலியான ஆவணங்களை பயன்படுத்தி, பத்திரப்பதிவு செய்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பதிவாளரை முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே போலியான ஆவணங்கள் வைத்து நிலத்தை பத்திரபதிவு செய்ததாக கூறி சாலை மறியல் மற்றும் சார்பதிவாளரை முற்றுக்கையிட்டு அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட குடும்பத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் அப்பாயு இவருக்கு 5 மகன் 2 பெண்கள் உள்ள நிலையில், அப்பாயு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.. இந்நிலையில் இவருக்கு சொந்தமாக துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 1 ஏக்கர் 87 சென்ட் அளவில் நிலம் உள்ள நிலையில், அப்பாயு நிலத்தை அவர்களது வாரிசுகளுக்கே தெரியாமல் மணி என்பவர் போலியான ஆவணங்களை கொடுத்து அப்பாயு நிலத்திற்கு பட்டா வாங்கியுள்ளார்.. இந்நிலையில் இதுகுறித்து அறிந்த அப்பாயுவின் மகன்கள் மற்றும் பேரன்கள் போலியான ஆவணங்கள் அளித்து நிலத்தை பத்திரவு செய்த செய்த நபர் மற்றும் பத்திரவு பதிவு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு, பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே சென்று சார்பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, சார்பதிவாளர் அலுவலகத்திலேயே அமர்ந்து அப்பாயு குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, போலியான பத்திர பதிவு செய்தது, குறித்து மாவட்ட பத்திரபதிவாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க காவல்துறையினர் கூறியதையடுத்து அப்பாயு குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.. இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

Tags

Next Story