ஆக்கிரப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமம் மல்லிபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 30 சென்ட் புறம்போக்கு நிலத்தில் கந்தசாமி, ராமாயி, அங்கம்மாள், அருண்குமார், முருகேசன், முனியப்பன் ஆகியோர் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் அவரது விவசாய காட்டிற்கு செல்வதற்காக தடம் வசதி கேட்டதற்கு அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் மறுப்பு தெரிவித்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து எடப்பாடி வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜேசிபி இயந்திரம் மூலம் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு வார கால அவகாசம் கேட்டதற்கு இணங்க அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தினை அளவீடு செய்து காலியிடங்களை மட்டும் அப்புறப்படுத்தி விட்டு திரும்ப சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Tags

Next Story