விற்பனையாளரை கண்டித்து ரேஷன் கடை முற்றுகை

விற்பனையாளரை கண்டித்து ரேஷன் கடை முற்றுகை

முற்றுகை போராட்டம்

கள்ளகுறிச்சி மாவட்டம், அணைகரைக்கோட்டாலத்தில் ரேஷன் கடைக்கு வராத விற்பனையாளரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைக்கோட்டாலம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. கிராமத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடை மூலமாக வழங்கப்படுகிறது. அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க விற்பனையாளர் ஏழுமலை நேற்று காலை 9 மணியளவில் வருவதாக தகவல் பரவியது. இதையொட்டி பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும் விற்பனையாளர் ஏழுமலை வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து, கடைக்கு முன் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். மேலும், விற்பனையாளர் சரிவர கடைக்கு வருவதில்லை எனவும், பொருட்களை வழங்குவதில் தாமதப்படுத்துவதாகவும் புகார் தெரிவித்தனர். விற்பனையாளர் மற்றும் அதிகாரிகள் யாரும் வராததால் காலை 11 மணியளவில் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

Tags

Next Story