தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவில்லிப்புத்தூரில் ஜாதி பாகுபாடுகளை களைந்து மக்கள் ஒற்றுமையை காக்க வலியுறுத்தி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருவில்லிப்புத்தூரில் ஜாதி பாகுபாடுகளை களைந்து மக்கள் ஒற்றுமையை காக்க வலியுறுத்தி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவாணி கிராமத்தில் அருந்ததியர் காலணியில் வசித்து வருபவர் கண்ணன் என்ற சின்னத்தம்பி.இவர் வினித் என்பவருடன் அவரது இருசக்கர வாகனத்தில் கடந்த 17ஆம் தேதி இரவு சாலையில் சென்ற போது பூவானி காளியம்மன் தெருவில் வசித்து வரும் மாரிமுத்து என்பவர் அவரது வீட்டின் முன்பு சாலையை மறித்து அவரது காரின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி இருந்துள்ளார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற கண்ணன் என்ற சின்னத்தம்பி முகப்பு விளக்கை அணையுங்கள் கண்கள் கூசுகிறது என்று கூறியுள்ளார் அதற்கு மாரிமுத்து என்பவரும் காரினுள் அமர்ந்திருந்த வினோத் என்பவரும் தகாத வார்த்தைகளால் சாதியை பற்றி பேசி கண்ணன் என்ற சின்னத்தம்பி என்பவரை அடித்ததாகவும் அதன்பின்பு கடந்த 18 ஆம் தேதி அன்று காலையில் மாரிமுத்து என்பவர் அவரது கூட்டாளிகளான வினோத்,தினேஷ்,தங்க முனியாண்டி,சரவணன் மற்றும் பலருடன் சேர்ந்து அருந்ததியர் காலணிக்குள் நுழைந்து கண்ணன் என்ற சின்னத்தம்பியையும் அவரது தம்பி மற்றும் தாயை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தாக்குதலுக்கு ஆளான கண்ணன் என்ற சின்னத்தம்பி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சின்னத்தம்பி தங்களை அடித்த கும்பலின் சிசிடிவி காட்சிகளை காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்ததின் அடிப்படையில் காவல்துறையினர் மாரிமுத்து அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.மேலும் மாரிமுத்து என்பவர் அவரது வீட்டின் முன்பு சின்னத்தம்பி,வெற்றி, சின்னத்தம்பியின் உறவினர் மாரிமுத்து 3 பேரும் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகினர் நகர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து அருந்ததியர் காலணிகளுக்குள் நுழைந்து சின்னத்தம்பி அவரது தாய் மற்றும் தம்பியை தாக்கிய மாரிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து வினோத் என்பவரை மட்டும் கைது செய்தனர்.

மேலும் தாக்குதலுக்கு ஆளான கண்ணன் என்ற சின்னத்தம்பி அவரது உறவினர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது இதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திமுகவின் கூட்டணியில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் புவானி கிராம அருந்ததியர் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும், அருந்ததியர் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், சாதி பாகுபாடுகளை களைந்து மக்கள் ஒற்றுமையை காக்க விடியா திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர். விடியா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதை தடுக்க விடியா திமுக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Tags

Next Story