ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க கோரி போராட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க கோரி போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டம் 

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க கோரி மின்வாரிய அலுவலகத்தில் சிபிஎம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாட்டில் நிராகரிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி முத்தையாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் புறநகர செயலாளர் ராஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து போராட்டத்தை துவக்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்தத் திட்டத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், சிறுகுறு தொழில் செய்வோர், மிகவும் பாதிக்கப்படுபவர்கள். இந்திய அரசு மின்வாரியத்தை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் கொள்கையை கைவிடக் கோரியும், கேரளா அரசை போன்று தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் கோசங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் புறநகர் குழு உறுப்பினர் வன்னிய ராஜா, அய்யலுசாமி, 53வது வார்டு மாதர் சங்க வெள்ளையம்மாள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story