கண்டன ஆர்பாட்டம்

கண்டன ஆர்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு ஏஐடியுசி உடல் ஊழப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பாக மாவட்ட தலைவர் முத்துமாரி தலைமையில், கைத்தறி, விசைத்தறி, மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 10 ஆம் தேதிக்குள் ஓய்வுதியம் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும், மாதந்தோறும் ரூ 3000 ஒய்வூதியம் வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்தி கல்வி, திருமணம், விபத்தில் இறக்கின்ற தொழிலாளர்கள், இயற்கை மரணம், பிரசவத்திற்கு வழங்கப்படும் உதவிதொகையை உயர்த்தி வழங்க வேண்டும் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் சிறப்பு போனஸாக ரூ 5000 வழங்க வேண்டும், நலவாரியம் மூலம் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களை பணிவரன் செய்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடல் உழைப்பு தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story