திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு போராட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் பட்டா கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டா கேட்டு விண்ணப்பித்த 33 ஆண்டு காலமாக பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டுக்குட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக கடந்த 1999 ஆம் ஆண்டு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதனை எதிர்த்து நபர் ஒருவர் தொடர்ந்து வழக்கின் காரணமாக பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

பிறகு வசிக்கும் பொது மக்கள் அரசு நிர்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயித்த கிரைய தொகையை செலுத்தி பட்டா பெற்றுக்கொள்ள வலியுறுத்தியது.

இதற்காக வங்கியில் பணம் செலுத்த உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் , தொடர்ந்து இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காலதாமதம் செய்யப்படுவதாக கூறி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் தங்களை நேரடியாக சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story