நாகர்கோவிலில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் 

நாகர்கோவிலில் அதிமுக  கண்டன ஆர்ப்பாட்டம் 
X
நாகர்கோவிலில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சட்டஒழுங்கு சீர்கெட்டை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கண்டன உரையாற்றினார். மாநில மீனவர் அணி இணை செயலாளர் பசலியான் நசரேத், மாநில நிர்வாகிகள் சிவ செல்வ ராஜன், சந்துரு, ராஜன், ராணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். பகுதி செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.நிகழ்ச்சியில் ஏராளம் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story