கதிராமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கதிராமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

போராட்டம் 

கதிராமங்கலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொளுத்தும் வெயிலில் பெண்கள் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கோரியும், மது அருந்தும் மற்றும் சீட்டுக்கட்டு விளையாடும் இடமாக மாறிவரும் நறுவெலி ஈமக்கிரியை மண்டபம், அய்யனார் கோயில், உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், பள்ளி கல்லூரி செல்லக்கூடிய மாணவ மாணவியருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், கதிராமங்கலத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தொடங்க வேண்டும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக காவல் நிலையம் உடனடியாக அமைக்க வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் ஏன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் கொளுத்தும் வெயிலில் பெண்கள் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெண்கள் இளைஞர்கள் ஒன்றினைந்து கதிராமங்கலம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் போதைப்பொருட்கள் விற்கும் கும்பல் மீது குண்டர் சட்டம் விதித்து கைது செய்யவேண்டும் இல்லையேல் வருகிற 25ஆம் தேதி பந்தநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என கூறினர். இந்நிகழ்ச்சியில் உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி, பாமக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எஸ்.வி.சங்கர், முன்னாள் பாமக மாவட்ட செயலாளர்கள் தி.ஜோதிராஜ், கோ.ரவிச்சந்திரன்,எஸ்.பி.குமார் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி.விமல்,பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் எஸ்.கே.ரமேஷ், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் மண்டபம் கலியமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சொ.திருஞானம் பிள்ளை, பாமக துணைச்செயலாளர்கள் டி.கே.ரவிராஜ், எம்.ஏ.குமார், அரசடி.சங்கர், ஆ.பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர்கள் வேல்வேந்தன், உத்திராபதி, மாவட்ட தேர்தல் பிரிவு தங்க.துரைராஜ், வன்னியர் சங்க மாவட்ட துணை தலைவர் கே.வெங்கட்ராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.என்.முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் சுந்தரம், தலைவர் செபஸ்டீன்ராஜ், உள்ளிட்ட பாமக, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் திருவிடைமருதூர் பந்தநல்லூர் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story