அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்- திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்- திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் மதுரை பேச்சியம்மன் படித்துறையில் திமுக அரசு கண்டித்து அதிமுக சார்பில் கருப்பு சட்டை அணிந்து முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருனாபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் விஷச்சாராயம் அருந்தியதில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 55 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விசாராயம் அருந்தி 55 பேர் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் கள்ளக்குறிச்சி சென்று உயிரிழந்த நபர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் தமிழக முழுவதும் திமுக அரசை கண்டித்து இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி மதுரை பேச்சியம்மன் படித்துறை சந்திப்பில் மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு ஆகிய 3 மாவட்டம் அதிமுகவினர் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகிய 3 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து தமிழகத்தில் கள்ளச்சராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியான சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் ஸ்டாலினை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் கள்ளச்சாராயம் குடித்து பலியாக காரணமாக இருந்த அதிகாரிகளை கண்டித்தும் 300க்கும் மேற்பட்டோர் கருப்புச்சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story